Tuesday, 19 February 2013

தமிழ் பிறழா நாவன்


நான் இந்த வலைப்பூவில் எனது சொந்த கருத்தை மட்டுமே எழுதுகிறேன். இதில் நான் எனது எண்ணவோட்டங்களை மட்டும் பதிந்திருந்தாலும் நான் கண்டு சந்தித்த சில மனிதர்களின் கருத்துக்களையும் கலந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் எனக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை இன்னும் ஆழமாக பரவச் செய்தன. தமிழ் சமுதாயத்தின் இந்தியச் சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கண்டு மனம் வெம்பி எழுதுகிறேன். நான் எந்த மதத்தையோ சாதியையோ புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை. எனது பதிவுகளெல்லாம் எத்தகைய உன்னதமான கலாச்சாரமும் கண்டுபிடிப்பும் கொண்ட இச்சமுதாயம் தன்னை மாற்றிக்கொள்ள முற்பட்டு தன்னை இழக்கிறது, இழந்து கொண்டு இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிக்கொணரும் முயற்சி தான். இதற்காக நான் மிகப்பெரிய ஆராய்ச்சி  எதையும் செய்திடவில்லை. இத்தனை வருட வாழ்வில் நான் கண்டு கேட்டு அனுபவித்த நிகழ்ச்சிகளைக் கொண்டு எழுதிகிறேன். நான் குறிப்பிடும் மாண்புமிகு மக்கள் அனைவரும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. இந்த மாண்புமிகு மக்களை குற்றவாளிகளாகவே கருதி தான் இக்கருத்துக்களை பதிகின்றேன். அதற்காக நான் மட்டும் குற்றமற்றவன் இல்லை நானும் குற்றவாளி தான். நான் பல இடங்களில் இந்தியன் என்பதை விட தமிழன் என்பதில் பெருமை கொண்டிருப்பதைக் காணலாம். அதன் காரணம் தமிழ் இல்லையேல் நான் பன்மொழிப் பண்டிதனாய் ஆகியிருக்க முடியாது அதனால் நிறைய கற்றிருக்க முடியாது ஆதலால் தமிழன் என்ற கர்வம் எனக்குண்டு என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டு என் பதிவுகளை பதிகின்றேன்.
                                                                                            தமிழ் பிறழா நாவன்